மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
2013ம் ஆண்டு வெளிவந்து திகில் பட இலக்கணத்தையே புரட்டிப்போட்ட படம் தி கஞ்சூரிங். கத்தி, ரத்தம் கிடையாது அறுவறுப்பான மேக் அப் கிடையாது. அசையும் நாற்காலி, மூடி திறக்கும் ஜன்னல் என வழக்கமான சீன் கிடையாது. அற்புதமான ஒலி, ஒளி அமைப்பு, திகைக்க வைக்கும் திரைக்கதை இவற்றாலேயே மிரட்டிச் சென்ற படம். இந்தியாவில் பெரும் வெற்றியை பெற்ற படம்.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஜேம்ஸ் வான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி உள்ளார். அதில் பேய் ஆராய்ச்சியாளராக நடித்த பேட்ரிக் வில்சனும், வேர் பார் மிங்காவும் அதே கேரக்டரில் இதிலும் நடித்துள்ளனர். அந்த படத்தில் பேய் பங்களாவுக்கு புதிதாக குடிவரும் ஒரு குடும்பத்தின் பேய் அனுபவம் படமாக்கப்பட்டிக்கும். இதில் லண்டனில் உள்ள ஒரு தனிமையான வீட்டில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் வசிக்கிறார். திடீரென அவர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான அனுபவங்கள் கிடைக்கிறது. அதனை பேய் ஆராய்ச்சியாளர்கள் எப்படி கண்டுபிடித்து, தடுக்கிறார்கள் என்கிற கதை.
ஜோசப் பிஸ்ரா இசை அமைத்துள்ளார், டான் பர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. உலக நாடுகளில் வருகிற 7ந் தேதியும், இந்தியாவில் வருகிற 10ந் தேதியும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவருகிறது.