ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடகத்தை சேர்ந்தவரான சங்கவி, தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக அமராவதி படத்தில் அறிமுகமானவர் பின்னர் விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ள போன்ற படங்களில் நடித்தவருக்கு கே.எஸ்.ரவிக்குமாரின் நாட்டாமையும் பெரிய ரீச்சைக் கொடுத்தது. அப்படி தொடங்கிய அவரது சினிமா பயணம் 2005-ம் ஆண்டு வரை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே கேரக்டர் நடிகையாக உருவெடுத்தார் சங்கவி. அந்த வகையில் இதுவரை 80 படங்களில் நடித்துள்ளார் அவர்.
இந்நிலையில், இந்த ஆண்டு (2016) பிப்ரவரியில் பெங்களூரைச்சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து என் கணவர் நான் தொடர்ந்து நடிக்க பச்சைக்கொடி காட்டி விட்டார் என்றும் செய்தி வெளியிட்ட சங்கவிக்கு தற்போது தமிழில் மூடர் கூடம் நவீன் இயக்கும் கொளஞ்சி என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கவும் தயார் என்று கூறியுள்ள சங்கவி, தனது அபிமான டைரக்டர்களை தொடர்பு கொண்டு மீண்டும் தான் நடிக்க வந்திருப்பதை தெரியப்படுத்தி வருகிறார்.