ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
கடந்த சில வருடங்களாக மீடியாக்களின் வெளிச்சத்தில் இருந்து வந்த லட்சுமி மேனன் 'வேதாளம்' படம் வெளிவந்த போது பரபரப்பாகப் பேசப்பட்டார். அதன் பின் அவரைப் பற்றிய செய்திகளும் குறைவாகவே வர ஆரம்பித்தன. 'மிருதன்' படமும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு வேறு எந்தப் புதுப்படங்களிலும் ஒப்பந்தம் ஆகாமலே இருந்தார் லட்சமி. எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட 'சிப்பாய்' படம் ஏறக்குறைய நின்று போய்விட்டது என்றே சொல்லலாம்.
விஜய் சேதுபதியின் ஜோடியாக 'றெக்க' படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு மீண்டும் லட்சுமி மேனன் பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. மதுரையில் ஆரம்பமான ஷுட்டிங் பரபரப்பாக நடந்து முதல் ஷெட்டியூல் முடிந்துவிட்டதாம். தான் இயக்கிய முதல் படமான 'வா டீல்' படம் வருமா, வராதா என்று தெரியாத நிலையில் இயக்குனர் ரத்தினசிவா 'றெக்க' படத்தை வீராப்புடன் இயக்கி வருகிறாராம்.
'றெக்க' படத்தில் தனக்குக் கிடைத்துள்ள கதாபாத்திரத்தில் மிகவும் விருப்பமுடன் நடித்து வரும் லட்சுமி மேனன் கிராமப்புறத்து கதாபாத்திரங்களுக்கு 'குட்பை' சொல்லிவிட்டாராம். அடுத்த இன்னிங்ஸ் தான் நினைப்பது போலவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.