பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கோலிவுட்டில் படங்களின் பூஜை அன்றே டைட்டீலையும் அறிவித்து வந்த நிலை இப்போது இல்லை. காரணம், ரசிகர்களை கவரக்கூடிய டைட்டீலாக படங்களுக்கு வைக்க வேண்டும் என்று நடிகர்கள் நினைப்பதால், கதை விவாதம் போன்று டைட்டீல் விவாதமும் நடத்துகிறார்கள் இயக்குனர்கள். அந்த வகையில், சமீபகாலமாக அஜீத்தின் ஆரம்பம், வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் டைட்டில்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்தபோதுதான் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் 60வது படத்தின் டைட்டீலையும் அறிவிக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை டைட்டிலை வைத்திருப்பதாக அப்படத்தில் பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள். ஆனபோதும் அதை அப்படக்குழு உறுதிப்படுத்தவில்லை. மேலும், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாம். அப்போது படத்தின் டைட்டீலையும் வெளியிடுகிறார்களாம்