10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
தமிழ் ஹீரோக்களில் பெண் கெட்டப்பில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். அதில், கமல்ஹாசன் அவ்வை சண்முகியில் பெரும்பாலான காட்சிகளில் மாமி கெட்டப்பில் நடித்திருந்தார். முன்னதாக, ஆணழகன் படத்தில் பிரசாந்த் பெண் வேடத்தில் நடித்தார். அவர்கள் இரண்டு பேருமே மிக அற்புதமாக நடித்திருந்ததால் இப்போதுவரை அந்த பெண் வேடங்கள் உதாரணமாக காண்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர்கள் நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு பெண் குரலில் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள்தான் குரல் கொடுத்தனர்.
ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள ரெமோ படத்தில் அவருக்கு அவரே குரல் கொடுத்துள்ளாராம். சின்னத்திரையில், தனது ஜனரஞ்சகமான பேச்சு மூலம் பெருவாரியான நேயர்களை கவர்ந்து வந்த சிவகார்த்திகேயன், மிமிக்ரி பேசுவதிலும் வல்லவராக இருந்தார். அந்த வகையில, ரெமோ படத்தில் தான் நடிக்கும் நர்ஸ் வேடத்துக்கு தானே பெண் குலில் டப்பிங் பேசியும் அசத்தியுள்ளாராம். ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி அப்படத்தின் சவுண்ட் இஞ்சினியராக இருப்பதால் சிவகார்த்திகேயனின் குரலை ஒர்ஜினல் பெண் குரலைப்போலவே அவுட்புட் காண்பித்துள்ளாராம்.