Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

200வது நாளன்று 100வது நாள் விழா கொண்டாடிய அனார்கலி..!

31 மே, 2016 - 14:41 IST
எழுத்தின் அளவு:
anarkali-movie-100th-day-celebration

இன்றைய சூழலில் படங்கள் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழா கொண்டாடுவதே அறிதாகிவிட்டது.. அதிலும் தமிழ்சினிமாவில் 100 நாட்கள் படங்களை பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் மலையாள சினிமாவில் அவ்வப்போது சில படங்கள் நூறாவது நாளை தொட்டு சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்க ஊக்கம் கொடுக்கின்றன.. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் திலீப் தனது படத்தின் 30வது நாளிலேயே 50வது நாள் போஸ்டரை வெளியிடுகிறார். மம்முட்டி படத்தின் 80 நாளிலேயே நூறாவது நாள் விழா கொண்டாடப்படுகிறது..


இப்படி சில படங்கள் 100வது நாள் எல்லையை தொடும் முன்னரே விழா கொண்டாட, இதில் பிருத்விராஜின் 'அனார்கலி' பட குழுவினர் மிகப்பெரிய வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். ஆம் இந்தப்படத்தின் 200வது நாள் அன்று படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். அதற்காக படம் 200 நாட்கள் ஓடியது என நினைக்கவேண்டாம்.. நூறாவது நாள் விழாவை நடத்த முடிவு செய்து அதை செயல்படுத்துவதற்கு அவர்களுக்கு 100 நாட்கள் தேவைப்பட்டுள்ளது என கருத்தில் கொள்வோம்.


கதாசிரியர் சச்சி இயக்குனராக அறிமுகமான இந்தப்படத்தில் பிருத்விராஜின் ஜோடியாக பிரியல் கோர் நடிக்க மற்றும் பிஜூமேனன், மியா ஜார்ஜ், சம்ஸ்க்ருதி ஷெனாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.. முக்கிய வேடத்தில் பால்வுட் நடிகர் கபீர் பேடி நடிக்க, படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கொச்சியில் நடைபெற்ற இந்த 100வது நாள் விழாவில் இயக்குனர்கள் ஜோஷி, ரஞ்சித், லால் ஜோஸ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு 100வது நாள் நினைவுப்பரிசை வழங்கினார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in