டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'கபாலி' படத்தின் வியாபாரமும், வசூலும் ஒரு மகத்தான சாதனையைப் படைக்கப் போகிறது என இப்போதே ஆரூடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் ஒரு மாதம் முன்பு வெளியான ஒரே ஒரு டீசர் ஏற்படுத்திய அதிர்வலையே அதற்குக் காரணம். படம் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் பெரிதாக வெளிவராத சூழ்நிலையில் 'கபாலி' மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலாய் மொழியில் வெளியீடு என்பதில் இருக்கும் ஆச்சரியமான தகவல் ஒரு புறம் வர, இன்னும் வேறு மொழிகளிலும் படத்தை அடுத்தடுத்து டப்பிங் செய்து வெளியிடலாமா என்று கூட படக்குழு யோசித்து வருகிறார்களாம். தெலுங்கு டீசருக்கும் கிடைத்த வரவேற்பும் அங்கும் படம் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலவி வேறு ஒரு ரூபத்தில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் இந்தப் படம் இதுவரையில் வந்த அவருடைய படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் என்று சொல்கிறார்கள்.
படம் பற்றி வரும் வியாபாரத் தகவல்களும், மற்ற மொழி உரிமைத் தகவல்களும் 'கபாலி' படத்தின் கணக்கை மேலும் மேலும் கூட்டிக் கொண்டே போகிறது. 'பாகுபலி' படம் அசத்திய அளவிற்கு 'கபாலி'யும் அசத்துவார் என்றே அனைவரது கணிப்பும் ஒரே மாதிரி இருக்கிறது.