ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி வாசு. 'சின்னத்தம்பி' படத்தில் குழந்தை நட்சதிரமாக நடித்த சக்தியை, பி.வாசு 'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. அதன் பிறகு சக்தி வாசு நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. பட வாய்ப்பின்றி 2 வருடங்கள் வீட்டில் இருந்த சக்தியை பி.வாசு கன்னடத்தில் தான் இயக்கிய 'சிவலிங்கா' படத்தில் நடிக்க வைத்தார். இதில் ஹீரோவாக சிவராஜ்குமார் நடித்தார். அந்தப் படம் அங்கு பெரிய வெற்றி பெற்றது.
அதே படத்தை பி.வாசு தமிழில் இயக்குகிறார். இதில் சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். கன்னடத்தில் நடித்த அதே கேரக்டரில் சக்தி வாசு நடிக்கிறார். 'தொட்டால் பூ மலரும்' படத்திற்கு பிறகு சக்தி வாசு தந்தையின் இயக்கத்தில் தமிழில் நடிக்கும் படம் இது. மகனை எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டும் என்று கருதும் பி.வாசு 'சிவலிங்கா'வின் தமிழ் பதிப்பில் அவரது கேரக்டரை மேலும் மெருகேற்றி வருவதாக கூறப்படுகிறது. தற்போது சக்தி வாசு '7 நாட்கள்', 'துரியோதனா' படங்களில் நடித்து வருகிறார்.