‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஜித்குமார் நடித்த 'வேதாளம்' படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அனிருத் இசையமைத்த ஆலுமா டோலுமா பாடல். இந்தப் பாடல் வெளியான அன்று... ஆலுமா டோலுமா பாடலைப் பற்றி நெகட்டிவ்வான கருத்துக்கள் பரவின. ஆனால் சில தினங்களிலேயே அந்தப் பாடல் ஹிட்டாகி குறை சொன்னவர்களை ஆச்சர்யப்படுத்தியது. அது மட்டுமல்ல, வேதாளம் படத்துக்கு அந்தப் பாடலே ஓப்பனிங்கையும் கொடுத்தது. அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித். பெயர் வைக்காத காரணனத்தினால் 'தல 57' என குறிப்பிடப்படும் அந்தப் படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். இந்த தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. எனினும் இப்போது தனது ட்வீட் மூலம் அதை அதிகாரபூர்வமாக அறிவித்து அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு ஜூலை 2 வது வாரத்தில் துவங்குகிறது.