ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கதை பிடித்திருந்தால் போதும், படத்தை இயக்குவது ஆணா, பெண்ணா என்பதெல்லாம் பார்க்கமாட்டார் மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜ். தமிழில் பெண் இயக்குனரான ப்ரியா டைரக்சனில் 'கண்ணாமூச்சி ஏனடா' படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார் பிருத்விராஜ். அவ்வளவு ஏன்,. 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை தந்ததற்காக மலையாள ரசிகர்கள் போற்றி கொண்டாடினார்களே பெண் இயக்குனர் அஞ்சலி மேனனை.., அவரது முதல் படம் 'மஞ்சாடிக்குறு' என்பதும் அதில் சிறப்பு தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார் என்பதும் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
இதை தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த ரோஷிணி தினகர் என்கிற இன்னொரு பெண் இயக்குனர் இயக்கும் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ். ஆச்சர்யமான விஷயமாக இந்தப்படம் முழுக்க முழுக்க நார்வே நாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. இசை சம்பந்தமான படமாக ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த படமாக இது உருவாக இருக்கிறதாம்.
கடந்த அக்டோபர் மாதமே படப்பிடிப்பை ஆரம்பிக்க இருந்தவர்கள், அப்போது அங்கே சீதோஷ்ண நிலை சரியாக இல்லாததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்தார்கள். இப்போது வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பை நடத்த போகிறார்களாம். ஷான் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தின் கதாநாயகி யார் என இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் ஒரு பாலிவுட் நட்சத்திரம் இந்தப்படத்தில் இடம்பெற இருக்கிறார் என்பதும் ஒரு கொசுறு தகவல்.