இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
காமெடி நடிகரான டன்மே பட், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல பின்னணி பாடகி லதா மகேஷ்கரை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி, அந்த நடிகர் மீது கைது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.
சச்சின் மற்றும் லதா மகேஷ்கர் இருவரும், சச்சினை விட விராட் கோஹ்லி 10 மடங்கு சிறந்தவர் என்ற தலைப்பில் விவாதிப்பது போன்று டன்மே பட் வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளார். இதில் தனது உடலின் மீது சச்சின் மற்றும் லதா மங்கேஷ்கரின் தலைகளை இணைத்து, தானே இருவரும் பேசுவது போன்று மிமிக்ரி செய்து, வீடியோவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு துறையிலும், இசைத் துறையிலும் மிகப் பெரிய நட்சத்திரங்களாக, புகழின் உச்சியில் இருக்கும் சச்சின், லதா மங்கேஷ்கரையும் அவமதிக்கும் விதமாக இந்த வீடியோ உள்ளது என பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கடும் கண்டமும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் டன்மே பட்டை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். பாலிவுட் நட்சத்திரங்கள் அனுபம் கர், ரிதீஷ் தேஷ்முக் ஆகியோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சிவசேனா, பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் டன்மே பட்டை கைது செய்ய வேண்டும் என மும்பை போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறப்பு குழு அமைப்பு விசாரணை நடத்தப்படும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளார். கூகுள், பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் இந்த சர்ச்சை வீடியோவை நீக்க அந்நிறுவனங்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீசாரும் தெரிவித்துள்ளனர்.