பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கன்னட நடிகரும், இயக்குநருமான சாந்தாராம் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார், அவருக்கு வயது 68. ரஜினி நடித்த தப்பு தாளங்கள், முரட்டுக்காளை படங்களில் நடித்தவர் சாந்தாராம். குறிப்பாக முரட்டுக்காளை படத்தில் வில்லன் ஜெய்சங்கரின் அடியாளாக அவரை பகைத்து கொள்பவர்களை மாட்டுக் கொம்பால் கொல்லும் அடியாளாக வருவார். இதுதவிவர பூட்டாத பூட்டுகள், உதிரிபூக்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் தவிர்த்து கன்னடத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி கன்னட படங்கள் சிலவற்றில் வசனகர்த்தவாகவும், மராலி கூடிஜே, பாலநோக்கு, கர்ணாண சம்பத்து போன்று சில படங்களை இயக்கியுள்ளார். இதில் இவர் இயக்கிய மராலி கூடிஜே-க்கு சிறந்த இயக்குநருக்கான மாநில விருதும் கிடைத்தது.