மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரேமம் படத்தின் வாயிலாக இளசுகளின் மனங்களை கொள்ளையடித்த மலர் டீச்சர் சாய் பல்லவி தனது முதல் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இயக்குனர் மணிரத்னம் படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்ட சாய் பல்லவி பின்னர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சாய் பல்லவி வருன் தேஜிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் சேகர் கமுல்லா இயக்கவிருக்கும் படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாக சைதன்யா நடிப்பில் பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும், மடோனா செபஸ்டியனும் பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் நிலையில் புகழ்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார்