மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மைதிரி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா இயக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. இதற்காக இப்படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட படக்குழு சென்னையில் முகாமிட்டுள்ளது. இதனிடையே ஜூனியர் என்.டி.ஆர் அண்மையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் செய்தி பரவுகிறது. ஆனால் இத்தகவலை ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க ஜூனியர் என்.டி,ஆர் எவ்வித ஏற்பாடுகளுக்கும் செய்யவில்லை என்றும், இது குறித்து வெளியாகும் தகவல்கள் யாவும் வதந்தி என்றும் ஜூனியர் என்.டி.ஆரின் நெருங்கிய நண்பர்கள் வழி தகவல்கள் கூறுகின்றன.