ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், பாலிவுட் சினிமாவில் மட்டுமல்லாது மராத்தி படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சமீபகாலமாக மராத்தி படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வசூலையும் குவித்து வருகிறது. இது மகிழ்ச்சியான விஷயம் என்கிறார் ரித்தேஷ்.
இதுப்பற்றி ரித்தேஷ் தேஷ்முக் கூறுகையில், மாநில மொழி படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியான விஷயம். சமீபத்தில் வெளியான 'சாய்ரத்' படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது, அதோடு ரூ.75 கோடியும் வசூலித்து சாதனை படைத்தது. இதையெல்லாம் பார்க்கும்போது மராத்தி சினிமா வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் இன்னும் அதிகளவில் வெளிவந்தால் தமிழ், தெலுங்கு போன்று மராத்தி சினிமாவும் அதிக வளர்ச்சி காணும் என்று கூறியுள்ளார்.