‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அனேகன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக டி.ராஜேந்தர் நடிக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கும் முதல் காமெடி படம் இது. படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். கே.வி.ஆனந்தின் உதவியாளர் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் தொடங்குகிறது. 40 நாட்கள் விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடக்கிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார் கே.வி.ஆனந்த். அனுஷ்கா, ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன் ஆகியோர் சாய்சில் இருக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பதை ஒரு வாரத்திற்குள் முடிவு செய்யப்பட்டுவிடும் என்கிறது தயாரிப்பு தரப்பு. டி.ராஜேந்தர் ஜோடியாக மும்தாஜ் நடிக்கலாம் என்றும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது.