சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் புதிய படம் கபாலி. அட்டக்கத்தி பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். படம் ஆரம்பித்த நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் எட்டுத்திக்கும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் ரஜினியின் ஸ்டைல் மற்றும் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த தாக்கம் உலக சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை.
கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ-ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஜாக்கிசான் தான் அணிந்திருக்கும் டீ-ஷர்ட்டில் உள்ள கபாலி படத்தின் போஸ்டரை கைநீட்டி காட்டுவது போல் உள்ளது.
விரைவில் கபாலி படத்தின் ஆடியோ வெளியீட்டை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து மிக விரைவில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.