டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்-சிவா கூட்டணி இணைகிறது. அஜித்தின் 57வது படமாக உருவாக உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் அஜித் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒருவர் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் அஜித் 57 படத்தில் தான் நடிக்க உள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் டு லாப்சன் கி கஹானி என்ற படத்தின் புரோமோஷன் வேலைகளில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது அடுத்த படம் குறித்த தகவலை அவர் தெரிவித்தார். பேட்டியில் அவர் கூறுகையில், நான் விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்திற்கு தற்போது கருடா என பெயரிட்டுள்ளனர். நான் அஜித்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறேன். இன்னும் 2 மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.