தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லட்சுமிமேனன் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்தான். என்றாலும் இன்னும் அவர் ஒரு பரபரப்பான நடிகையாக வரவில்லை. அவ்வப்போது ஒரு படத்தில் நடிக்கும் சாதாரண நடிகையாகத்தான் இருந்து வருகிறார். அந்த வகையில், ஜிகர் தண்டாவிற்கு பிறகு ஒரு வருடமாக காணாமல் போனவர், பின்னர் கார்த்தியுடன் கொம்பனில் நடித்தார். அதன்பிறகு அஜீத்தின் தங்கையாக வேதாளம், பின்னர் ஜெயம்ரவியுடன் மிருதன் என அவர் நடித்த இந்த படங்கள் எல்லாமே ஹிட்டதான். ஆனபோதும், தற்போது விஜயசேதுபதி நடிக்கும் றெக்க படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் லட்சுமிமேனன்.
மேலும், ஆரம்பத்தில இருந்தே கிளாமருக்கு எதிரி போன்று நடித்து வரும் லட்சுமிமேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் தண்ணிக்குள் முத்தக்காட்சியில் நடித்தார். அதுகூட இளசுகளை பெரிதாக கவரவில்லை. இந்த நிலையில், தற்போது றெக்க படத்தில் நடிக்கிறார். இந்த படமும் அவரது வழக்க மான பாணி படம்தான். என்றாலும்கூட பாடல் காட்சிகளில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு ஓரளவு கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம் லட்சுமிமேனன். முன்பெல்லாம் பட்டும் படாமலும் கிளாமர் வெளிப்படும் காஸ்டியூமை கொடுத்தாலே கடுப்பாகி விடும் லட்சுமிமேனன், இந்த றெக்க படத்திற்காக கொடுத்தபோது எந்தவித முக சுழிப்பையும் காட்டாமல் அதை அணிந்துகொண்டு நடித்துள்ளாராம்