‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராகுல் ப்ரீத்தி சிங் நடித்த சரைய்னொடு எனும் திரைப்படம் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களின் வெற்றிக்கு பின்னர் மலையாளத்தில் யோதாவ் என்ற பெயரில் நேற்று திரைக்கு வந்தது. இப்படம் கேரளாவில் 80 திரையங்குகளில் திரைக்கு வந்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் போல் கேரளாவிலும் அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் இப்படத்தின் வெளியீட்டின் போது அல்லு அர்ஜூனுக்கு பிரம்மாண்ட கட்அவுட், மேள தாளம் என மலையாள ரசிகர்கள் கேரளா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஈடான வரவேற்பு கொடுத்துள்ளனர்.
முதல் நாள் வசூலும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் திருப்தி அளித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அல்லு அர்ஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். யோதாவ் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கும் நல்ல விமர்சனத்திற்கு தனது மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அல்லு அர்ஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்