'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள 'இறைவி' படம் ஜூன் 3-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'இறைவி' படத்தை தயாரித்துள்ளனர்.
பட விநியோகத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் அனுபவம் பெற்றிருந்தாலும், இறைவி படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் எனும் வெளியீட்டு உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் விற்றுவிட்டனர். எம்.ஜி. அடிப்படையில் ஏழரை கோடி கொடுத்து இறைவி உரிமையை கைப்பற்றியுள்ளது கே.ஆர்.பிலிம்ஸ்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தை கே.ஆர்.பிலிம்ஸ்தான் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தது! விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது கே.ஆர்.பிலிம்ஸ். 'பிச்சைக்காரன்' இந்நிறுவனத்தின் முதல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து காக்காமுட்டை மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை படத்தை வாங்கியுள்ள கே.ஆர்.பிலிம்ஸ் அதற்கு முன்னதாக இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் கார்த்திக் சுப்பராஜின் 'இறைவி' யை வெளியிடவிருக்கிறது.
'ஏரியா 78' என்ற நிறுவனமும் பட விநியோகத்தில் கே.ஆர்.பிலிம்ஸுடன் கை கோர்த்துள்ளது. சென்னையில் நடந்த 'இறைவி' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் 'ஏரியா 78' நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் 18 லட்சம் செலவிடப்பட்டிருந்தது. 'ஏரியா 78' நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை விநியோகம் செய்யவிருப்பதோடு, திரைப்பட தயாரிப்பிலும் களமிறங்கவிருக்கிறது.