சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பிரபல இயக்குனர் (தமிழில் 'அன்வர்' புகழ்) அமல் நீரத் டைரக்சனில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் கதாநாயகியாக ஒப்பந்தமான அனு இம்மானுவேல், சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு அதிரடியாக மாற்றப்பட்டு, அதன்பின் புதிய கதாநாயகியாக கார்த்திகா முரளிதரன் என்கிற புதுமுகம் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த கார்த்திகா வேறு யாருமல்ல, பிரபல ஒளிப்பதிவாளர் சி.கே.முரளிதரனின் மகள் தான்.
இந்த சி.கே.முரளிதரன் தான் பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் வெளியான இரண்டு சூப்பர்ஹிட் படங்களான '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பவர் குறிப்பிடத்தகது. பெங்களூரில் கல்லூரிப்படிப்பை முடித்த கார்த்திகா, மேடை நாடகங்களில் நடித்த அனுபவமும் உள்ளவர். தனது மனம் கவர்ந்த நாயகன் துல்கர் சல்மானுடனேயே தனது முதல் படம் அமைந்ததில் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார் கார்த்திகா முரளிதரன். இவரது தம்பி ஆகாஷ் நேற்று மலையாளத்தில் வெளியாகியுள்ள 'ஸ்கூல் பஸ்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.