இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் இருந்து ஒரு வெள்ளோட்டமாக இயக்குனர் விக்ரமால் தமிழுக்கு 'கோகுலம்' படம் மூலம் அறிமுகமானார் நடிகர் ஜெயராம்.. மலையாளத்தைப்போல அவருக்கு தமிழும் செட்டாகிவிட கடந்த 22 வருடங்களாக தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஜெயராம்.. ஆனால் ஏனோ இன்னும் தெலுங்கில் ஒரு படம் கூட நடிக்கவில்லை ஜெயராம்.. அதில் அவருக்கு ஆர்வமும் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம்.. ஆனால் இப்போது ஒரு தெலுங்குப்படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது.
அதுவும் பிரபாஷ்-அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில்.. உடனே பாகுபலி இரண்டாம் பாகமோ என நினைத்து விடாதீர்கள்.. இந்தப்படத்தின் பெயர் 'பாஹ்மதி'.. இதுவும் ஒருவகையில் சரித்திரப்படம் போல தான். இதில் ஜெயராமுக்கு முக்கிய வேடம் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் தனது கேரக்டர் கெட்டப்பையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
இன்னொருபக்கம், சமீபத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' படம் மலையாள ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து தற்போது அதை தெலுங்கிலும் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மோகன்லாலை தொடர்ந்து ஜெயராமும் தெலுங்கில் உள்ளே நுழைவதன் மூலம் மலையாள சினிமாவின் வியாபார எல்லை இன்னும் அதிகுமாகும் என நம்பலாம்.