'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தொழில் அதிபரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான வசந்த் அண்ட் கோ எச்.வசந்தகுமாரின் மூத்த மகன் விஜய் வசந்த் நடிகராக இருக்கிறார். இளைய மகன் வினோத்குமார் தயாரிப்பாளராக இருக்கிறார். டிரிபிள் வி என்ற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'என்னமோ நடக்குது' என்ற படத்தை தயாரித்தார். தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
வினோத் குமாருக்கும் டாக்டர் சிவனைய்யா, எழிலரசி தம்பதிகளின் மகள் சிந்துவுக்கும் நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால் புதூரில் திருமணம் நடந்தது. விழாவில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரியின் பேரனும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான அணில் சாஸ்திரி, தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள்,ஏராளமான தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வருகிற 9ந் தேதி சென்னை காமராசர் அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.