ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித்-விஜய் ரசிகர்கள் எப்படி இணையதளங்களில் எதிரும் புதிருமான கருத்துக்களை வெளியிட்டு மோதிக்கொள்கிறார்களோ, அதேமாதிரி ஒருகாலத்தில் சிம்பு-தனுஷின் ரசிகர்களும் மோதிக்கொண்டார்கள். அவர்களுக்கிடையே தொழில் போட்டியும் இருந்து வந்ததால் ரசிகர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், அந்த மோதலை தடுக்கும் முயற்சியாக சிம்பு-தனுஷ் இருவருமே மேடைகளில் ஒன்றாக தோன்றி தோள் போட்டுக்கொண்டனர். அதையடுத்து அவர்களது ரசிகர்கள் வார்த்தைகளால் மோதிக்கொள்வது பின்னர் குறைந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் வெளியான சிம்புவின் இது நம்ம ஆளு படத்தை தனுஷ் ரசிகர்கள் வரவேற்று வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர். இதையடுத்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், இது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த ஆரோக்யமான நிலை தொடர வேண்டும் என்று டுவிட்டரில் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.