ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரம்மோற்சவம் படத்திற்கு பின்னர் சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் தெலுங்கு திரைப்படம் அ.ஆ. நிதினுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள அ.ஆ எனும் காதல்கதையம்சம் கொண்ட படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். இப்படம் ஜுன் 2ல் திரைக்கு வரவுள்ளது. ஹரிக்கா & ஹாசினி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.
அ.ஆ படக்குழுவுடன் நாயகி சமந்தாவும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். அ.ஆ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரேமம் நாயகி அனுபமா பரவேஸ்வரன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.