இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் வெளியான துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படத்தை மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப்பும் கூட பாராட்டியுள்ளது ஆச்சர்யப்பட வைக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், “கம்மட்டிப்பாடம் மிகச்சிறந்த ஒரு கேங்க்ஸ்டர் படம்.. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் படம்.. படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல, “இந்தப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்க' படத்தைப்போல மேக்கிங்கில் மிரட்டுகிறது” என்றும் படத்தின் இயக்குனரை பாராட்டும்போது 'ராஜீவ் ரவி தி பாஸ்' என் கூறியுள்ளார். மேலும் முதலில் இந்தப்படத்தின் டைட்டிலை 'காமெடிப்பட்டம்' என தவறுதலாக குறிப்பிட்ட அனுராக் காஷ்யப், பின் தனது தவறை திருத்தி 'கம்மட்டிப்பாடம்' என சரியாக குறிப்பிட்டுள்ளார். படத்தின் இயக்குனர் ராஜீவ்ரவி, அனுராக் காஷ்யப்பின் 'தேவ் டி', கேங்க்ஸ் ஆப் வாசப்பூர்-1 மற்றும் 2ஆம் பாகங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.