‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் நடிகைகளில் கனவுக்கன்னிகளில் ஒருவராக கோலோச்சிய கரீனா கபூர் பாலிவுட் நடிகர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு மலையாள நடிகரான மெகாஸ்டார் மம்முட்டியை ஹேண்ட்சம் நடிகர் என்கிற ரீதியில் பாராட்டியுள்ளது மம்முட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.. நடிகர்களில் 65 வயது ஆனாலும் கூட, இப்போதும் 35 வயது இளைஞரை போன்று காட்சியளிப்பவர் என்றால் அது நடிகர் மம்முட்டி ஒருவர்தான். இதைத்தான் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற பிளவர்ஸ் டிவி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட கரீனா கபூரும் கூறியிருக்கிறார்.
மேலும் மம்முட்டி பற்றி பேசிய கரீனா, “இந்த 65 வயதிலும் மம்முட்டி தனது உடலை ஓர் இளைஞனைப்போல கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தனது உடலை பேணிக்காப்பதில் அவர் சற்றே கண்டிப்பானவரும் கூட. இந்த வயதில் பாலிவுட் ஹீரோக்கள் கூட தங்களது உடலமைப்பை சரிவர பராமரிக்க முடியாமல் திணறுகின்றனர்” என்றும் கூறியுள்ளார். பொதுவாகவே, பாலிவுட் நடிகைகளுடன் நடிக்க ஆர்வம் காட்டும் மம்முட்டி இதுவரை காத்ரீனா கைப் மற்றும் ஹ்யூமா குரோசி என ஒரு சிலருடன் நடித்துள்ளாரே தவிர, அவருடன் இணைந்து நடித்திராத கரீனா கபூர் மம்முட்டியை இந்த அளவுக்கு புகழ்ந்திருப்பது ஆச்சர்யம் தான்.