'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தில் ஆண்டரியாவும் நடித்துள்ளார். சிம்புவின் முன்னாள் காதலி வேடம் அவருக்கு. பாண்டிராஜ் இயக்கி உள்ள இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது. படத்தில் நடித்தது பற்றி இதுவரை பேசாத ஆண்ட்ரியா இப்போது பேசியுள்ளார். சிம்புவை நடிப்பு அசுரன் என்று வர்ணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகி விடுவார். அவருடைய திறமை அபரிதமானது. ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன். யதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது இது நம்ம ஆளு. பொதுவாகவே வலுவிழந்த கதைகளில் முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு கொஞ்சமும் கிடையாது. சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதை தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில் இது நம்ம ஆளு திரைப்படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன்" என்கிறார் .