‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கேடி படத்தில் இலியானாவுடன் தமிழில் அறிமுகமானவர்தான் தமன்னா. அதன்பிறகு இலியானா தெலுங்கிற்கு சென்று விட, தமன்னாவோ தொடர்ந்து தமிழில் நடித்து ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார். இப்போது வரை அவரது கோலிவுட் மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. அதிலும் பாகுபலிக்குப்பிறகு படங்களை செலக்டீவாக நடிக்கத் தொடங்கிய தமன்னா, தோழா வெற்றிக்குப்பிறகு பாகுபலி-2, தர்மதுரை, கத்திச்சண்டை, அபிநேத்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இந்த படங்களில் பிரபுதேவாவுடன் நடித்துள்ள அபிநேத்ரி படத்திற்காக அவர் உடம்பில் வெயிட் போட்டு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த படத்திலும் எனது வழக்கமான தோற்றத்திலேயே நடிக்கிறேன். உடம்பில் வெயிட் போட்டு நடிப்பதற்கான கதை இதுவல்ல. அதோடு, நான் இதுவரை அனுஷ்கா மாதிரி எந்த படத்திலும் உடம்பை வருத்தி நடித்ததில்லை. அப்படி நடிப்பதில் எனக்கு பெரிதாக உடன்பாடும் இல்லை என்கிறார் தமன்னா