டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2003 ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தின் மூலம் தனது அண்ணன் மோகன் ராஜாவால் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த 13 வருடங்களில் 19 படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனாலும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் என்பது அவருக்கு எட்டாத கனவாகவே இருந்தது. கடந்த வருடத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றியடைந்தன. கடைசியாக ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த படம் 'மிருதன்'. ஓரளவு வெற்றியடைந்த மிருதன் படத்தைத் தொடர்ந்து தற்போது, 'ரோமியோ ஜூலியட்' லக்ஷ்மண் இயக்கத்தில் 'போகன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
இது அவரது 21வது படமாம். தற்போது தமன்னா ஹீரோயினாக நடிக்கும் 'அபினேத்ரி' என்ற ஹாரர் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார் விஜய். 'போகன்' படத்தை ஜெயம் ரவியும், 'அபினேத்ரி' படத்தை விஜய்யும் முடித்துவிட்டு, தங்களது புதிய படத்தில் கை கோர்க்கிறார்கள். இப்படம் தவிர சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் 'ஜெயம்' ரவி நடிக்கவிருக்கிறார்.