‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இரண்டு முறை தொடர்ந்து தேசிய விருது வாங்கிய தயாரிப்பாளர் J சதீஷ் குமார் தயாரிப்பில் தற்போது வெளியாக இருக்கும் வித்தியாசமான படம் 'தரமணி'. தங்கமீன்கள் என்னும் அழகிய பொக்கிஷத்தை தமிழ் சினிமாவிற்கு வழங்கி, தேசிய விருதை தட்டிச் சென்ற இயக்குனர் ராமிற்கு மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை தேடி தரும் வண்ணமாக அமைந்திருக்கிறது. கடந்த மே 21 ஆம் தேதி வெளியான தரமணி திரைப்படத்தின் டீசர். சில நாட்களிலேயே யூடூபில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ள இந்த படத்தின் டீசர், பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது இப்படத்தின் டீசர் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த டீசரில் இடம்பெறும், ''எனக்கு வெறும் 15 நண்பர்கள் தான் பேஸ்புக்கில் உள்ளனர், உனக்கு மட்டும் எப்படி 2248 நண்பர்கள்?", "இந்த குட்டை பாவடையை ஏன் நீ இன்னும் நீளமாக போடவில்லை?","அவனுக்கு எப்படி டி உன்னுடைய அளவு தெரியும்?" போன்ற கேள்விகளுடன் ஆரம்பமாகும் இந்த படத்தின் டீசர் மக்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் பெரும் அளவில் தூண்டியிருக்கிறது. மேலும் இந்த டீசரின் டிவிஸ்டாக, "அவனுடன் படுக்கனுமா வேணாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நான்" என்று ஆண்ட்ரியா சொல்லும் தருணங்கள் யாவும் காதலர்களுக்கு இடையே ஏற்படும் சிறு சிறு விரிசல்களை அழகாக உணர்த்துவதாக தோன்றுகிறது.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் காதலர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் புதுமுகம் வசந்த்ரவி ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.