தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித், ஸ்ருதிஹாசன்,லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சர்தார் கப்பார் சிங் படத்தின் தோல்விக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ள பவன் கல்யாண் ஐதராபாத் திரும்பியதும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜுன் 2ல் பொள்ளாச்சியில் துவங்கவுள்ளது.