தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர்களில் விஷ்ணு, சூரி, அப்புக்குட்டி ஆகியோர் மார்க்கெட்டை பிடித்து விட்டனர். இவர்களில் அப்புக்குட்டியை அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக்கினார் சுசீந்திரன். அதையடுத்து மன்னாரு படத்திலும் அவர் நாயகனாக நடித்தார். ஆனால் அந்த படம் ஓடாததால் அப்புக்குட்டிக்கு இருந்த மார்க்கெட்டும் சரிந்தது. இருப்பினும் மீண்டும் காமெடியன் வேடங்களில் நடித்து தற்போது மார்க் கெட்டில் நீடித்து வருகிறார்.
அதோடு, அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்து பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்டுக்கான தேசிய விருது பெற்ற அப்புக்குட்டிக்கு, தமிழ் சினிமாவை விட மலையாள சினிமாவில் நல்ல மரியாதை கிடைக்கிறதாம். அதாவது, இங்குள்ள தயாரிப்பாளர்கள் அவரை இன்னும் காமெடியன் லிஸ்டிலேயே வைத்திருக்க, மலையாளிகளோ தேசிய விருது பெற்ற நடிகர் என்ற மரியாதையை கொடுக்கும்விதமாக, அவருக்கு கேரவன் வசதியெல்லாம் செய்து கொடுக்கிறார்களாம்.
மேலும், தமிழில் தனக்கு அந்த மாதிரி வசதிகள் செய்து தரப்படவில்லை என்றாலும் கவலைப்படவில்லை அப்புக் குட்டி. படப்பிடிப்பில் வெப்பம் அதிகமாக தாக்கினால் தனது காருக்குள் சென்று ஏசியை போட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். தற்போது நாள் சம்பளம் பேசி நடிக்கும் அப்புக்குட்டி ஒரு நாளைக்கு 70 ஆயிரம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.