ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்பீடுனோடு படத்தின் தோல்விக்கு பின்னர் இளம் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் பிரபல இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளரின் மகனான ஸ்ரீநிவாஸிற்கு பெயர் சொல்லும் படி ஒரு வெற்றி படமும் இதுவரை அமையவில்லை. ஆனால் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் படம் தனது திரை உலக வாழ்க்கையில் வெற்றிப்படமாக அமையும் என ஸ்ரீநிவாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ளார். பொய்யபடி ஸ்ரீனுவின் முந்தைய திரைப்படமான அல்லு அர்ஜூனின் சரைய்னொடு படத்தில் நாயகியாக நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் ராம் சரணுடன் நடித்து வருகின்றார்.