ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் 2வது சர்வதேச யோகா தினம், இந்த ஆண்டு வருகிற ஜூன் 21ந் தேதி சண்டிகரில் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸை அழைத்து வர தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்த ஜூலியாவை வரவழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
“பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜூலியா ராபர்ட்ஸ் தினமும் யோகா செய்யக்கூடியவர். அவர் முறைப்படி யோகா கற்றவர். யோகாவின் பெருமைகளை அவ்வப்போது கூறி வருகிறவர். அவர் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொண்டால் யோகா சர்வதேச கவனம் பெறும் யோக இந்தியாவில் தோன்றிய கலை என்பதை உலகம் உணரும். இதற்காக அமெரிக்க தூதரகம் மூலம் ஜுலியாவை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகாவில் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள். பிரபலங்கள் என 500 பேர் கலந்து கொள்கிறார்கள் என மத்திய சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.