இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
'ஜிகிர்தண்டா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் 'இறைவி'. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, அபி அண்ட் அபி அபினேஷ் இளங்கோவன், திருக்குமரன் எண்டர்பிரைசஸ் சி.வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா, கருணாகரன் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
பெண்களை முன்னிலைப்படுத்தி கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள குடும்ப பாங்கான படம். வருகிற ஜூன் 3ந் தேதி வெளிவருகிறது. படத்தை விளம்பரப்படுத்த புதுமையான முறை ஒன்றை கையாள்கிறார்கள். ஆட்டோவில் டிரைவரின் சீட்டுக்கு பின்புறம் சிறிய அளவிலான மானிட்டரை பொருத்துகிறார்கள். அந்த மானிட்டரில் இறைவி படத்தின் டீசரும், டிரைலரும், பாடல் துளிகளும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும். பின்னால் அமர்ந்து வரும் பயணிகள் அதனை ரசித்தபடி வரலாம்.
கொஞ்சம் காஸ்ட்லியான முறையாக இருந்தாலும், டி.வி விளம்பரத்துக்கு கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுப்பதை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு என்கிறார்கள். தமிழ் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் இதனை பொருத்த இருக்கிறார்கள். இதனை கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் பாபி சிம்ஹா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.