தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரத் நடித்த அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை முதன்முதலாக இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் மீண்டும் ஒளிப்பதிவை தொடர்ந்து வந்த அவர், கோலிசோடா என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அப்படம் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து விக்ரம் நடிப்பில் பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது பரத், இராஜகுமாரன், ஆகியோர் நடிப்பில் கடுகு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 4 நாட்கள்தான் படப்பிடிப்பு நடக்க வேண்டியுள்ளதாம்.