டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக சிம்பு நடித்த படங்கள் திரைக்கு வருவதற்குள் ஒருவழியாகி விடுகின்றன. இதோ வருகிறது அதோ வருகிறது என்று பல தேதிகளை அறிவிக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் மாற்று தேதியை சொல்லிவிடுகிறார்கள். அப்படித்தான் வாலு படம் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப் பட்டு பின்னர் வெளியானது. அதேபோல் இப்போது இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸ் தேதியும் சில முறை அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்று தேதி அறிவித்தனர். தற்போது மே 27-ந்தேதி இது நம்ம ஆளு திரைக்கு வந்து விடும் என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித் துள்ள அச்சம் என்பது மடமையடா படமும் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. தற்போது தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், சிம்பு படத்தின் இறுதிகட்ட பணிகளையும் கவனித்து வருகிறார். அதோடு, ஜூன் மாதம் 17-ந்தேதி அச்சம் என்பது மடமையடா படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் 15-ந்தேதி படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் கெளதம்மேனன்.