பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
'பிச்சைக்காரன்' வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி 'எமன்' மற்றும் 'சைத்தான்' படங்களில் நடித்து வருகிறார். இதில் 'சைத்தான்' படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்கார கெட்-அப்பில் எந்த மாற்றமும் இல்லை. அவரைச் சுற்றி பாம்புகள் அவரை கொத்த முயற்சிப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.
சைத்தானை பாரதி கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக பிரபல பைக் வீராங்கணையும், நடிகையுமான ஆலிஷா அப்துல்லா நடிக்கிறார். இவர்களுடன் அருந்ததி நாயர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்க, பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.