சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களுக்குப்பிறகு விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் அவரை மெகா நடிகராக்கி விட்டது. அதனால் அதன்பிறகு அவர் நடித்து வந்த சைத்தான் படத்தையும் தற்போது பிரமாண்டமாக்கியுள்ளனர். இந்த படத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக நடித்துள்ள விஜய் ஆண்டனி, ஒரு சமூக பிரச்சினையை கையிலெடுக்கிறாராம். அதனால் மாஸ் ஹீரோயிசம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நிறையவே இடம்பெற்றுள்ளதாம்.
மேலும், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி க்ரூஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த சைத்தான் படத்தை மே மாதமே வெளியிட முன்பு திட்டமிட்டிருந்த விஜய் ஆண்டனி, எமன் படத்தில் நடிக்க சென்று விட்டதால் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க காலதாமதம் ஆகி விட்டதாம். ஆனால் தற்போது அனைத்து வேலை களும் முடிக்கப்பட்டு சைத்தான் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இப்படத்தை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சைத்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாம்புகள் கூட்டத்திற்கு நடுவே விஜய் ஆண்டனி சிக்கிக்கொண்டது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.