டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை அவர்கள் தங்களது ரசிகர்களில் எவரேனும் ஒருவருக்காக ஒதுக்கும் சில நிமிடங்கள் கூட சம்பந்தப்பட்டவருக்கு வாழ்நாளெல்லாம் நினைத்து பார்க்ககூடிய இனிய நினைவாக மாறிவிடும். அமிதாப், ரஜினி போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்ந்துள்ளவர்கள் தான். அந்தவகையில் தான் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவருடைய பிறந்தநாளில் அவருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி அந்த பெண்ணை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார் அமிதாப் பச்சன்.
அந்த பெண்ணின் பெயர் ஹர்ஷிதா. இதுபற்றி தனது முகநூலில் போட்டோவுடன் கூடிய பதிவு ஒன்றையும் இட்டுள்ளார் அமிதாப் பச்சன். “ஹர்ஷிதா என்கிற பெண் என்னுடன் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பினாள்.. அழகும் திறமையும் வாய்ந்த அவள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவள்.. எந்நேரமும் சிறிய ஆக்சிஜன் குடுவையுடன் சுவாசத்தை மேற்கொண்டு புற்று நோய்க்கு எதிராக போராடி வருபவள்.. அவள் விரைவில் புற்றுநோயை வென்று குணமாகி வீடு திரும்பவேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என மனம் நெகிழ அந்த பெண்ணைப்பற்றி குறிப்பிட்டுளார் அமிதாப்.