பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படம் சிரஞ்சீவியின் 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராம் சரண் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் என்பதே இப்படம் குறித்த தற்போதைய தகவல். தெலுங்கில் கத்திலான்டோடு என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பூஜையில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் இப்படத்தில் ஒரு காட்சியிலேனும் சிரஞ்சீவியுடன் தோன்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி கத்திலான்டோடு படத்தில் சிறப்பு தோற்றத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க விவி விநாயக் ஏற்பாடு செய்துள்ளாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. அல்லு அர்ஜூன் சரைய்னொடு படத்தின் வெற்றிக்கு பின்னர் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.