Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் பிரதிபலித்தது ரோஷன் ஆண்ட்ரூஸின் கேரக்டரைத்தான்..!

23 மே, 2016 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Did-Mohanlal-reflected-Roshan-Andrews-Character

சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. பட்ஜெட்டை சுருக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொல்லிவிட்டால் போதும், கதாநாயகனின் ஆடி காரை ரிப்பேராக்கி, அவன் அம்பாசிடர் காரில் போகும்போது ஆக்சிடென்ட் நடப்பதாய் காட்டி செலவை மிச்சம் பண்ணுவார்கள்.. ஆனால் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசை பொறுத்தவரை அவர் ஒரு பர்பெக்சனிஸ்ட்.. ஆடி கார் வேண்டுமென்றால், அதுதான் வேண்டும். யாருக்காகவும் எந்தவித காம்ப்ரமைசும் பண்ணிக்கொள்ள மாட்டார். 'மும்பை போள்ஸ்' படத்தின் கதையை இவர் பல நடிகர்களிடம் சொன்னபோது கிளைமாக்ஸில் கதாநாயகனின் இமேஜை பாதிக்காத மாதிரி காட்சிகளை மாற்றினால் நடிக்க தயார் என்றார்கள். காரணம் நாயகன் ஒரு ஹோமோ செக்சுவல் நபர். ஆனால் இவர் மறுத்துவிட்டதோடு, அதற்கு ஒப்புக்கொண்ட பிருத்விராஜை வைத்துதான் அந்தப்படத்தை இயக்கினர்.


மலையாளத்தில் இவர் இயக்கத்தில் சினிமாவை பின்னணியாக கொண்டு பல வருடங்களுக்கு முன்னாள் மோகன்லால் நடிப்பில் 'உதயநானுதாரம்' என்கிற படம் வெளியானதே, அந்தப்படத்தில் ஒரு டைரக்டராக நடித்திருந்த மோகன்லாலின் குணாதிசயங்களாக காட்டப்பட்டவை எல்லாம் ரோஷன் ஆண்ட்ரூஸின் உண்மையான குணாதிசயங்கள் தானாம். தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அடுத்தவாரம் வெளியாகவுள்ள 'ஸ்கூல் பஸ்' படத்திலும் கூட எந்த ஒரு இடத்திலும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் தான் நினைத்தபடி படத்தை எடுத்து முடித்துள்ளார் என்கிறார்கள் படக்குழுவினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in