சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சில தினங்களுக்கு முன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டி பாடம்' படம் வெளியானது.. ராஜீவ் ரவி இந்தப்படத்தை இயக்கியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக துல்கரின் முந்தைய படங்களின் வசூலுடன் இந்தப்படத்தால் போட்டிபோட முடியவில்லை. படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் வகையை சேர்ந்தது என்பது ஒரு காரணம்.. தவிர, படம் ரிலீஸான நேரத்தில் இரண்டு நாட்கள் பெய்த மழையும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்று வெற்றி தோல்வியால் ஏற்பட்ட கட்சிகளின் அடிதடியால் சில இடங்களில் நடைபெற்ற பந்தும் கூட இந்தப்படத்தின் வசூல் குறைவதற்கு காரணமாகிவிட்டன.
இது ஒரு பக்கம் இருக்க இந்தப்படத்தின் சில காட்சிகள் ஸ்கிரீன் ஷாட்டுகளாக எடுக்கப்பட்டு முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் படத்தின் சென்சார் காபி லீக் ஆனது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சில விஷமிகள் முயல்கின்றனர். இதனால் படம் பார்க்க தியேட்டருக்கு கிளம்பும் சாதாரண பார்வையாளர்கள் கூட, திருட்டு விசிடி வெளியாகிவிட்டதே அதில் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுங்கும் அபாயம் உள்ளது.. ஆனால் உண்மையில் அந்த ஸ்கிரீன் ஷாட்டுகள், படத்தின் ட்ரெய்லர் காட்சியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டவைதானாம். நூதனமான முறையில் வதந்தியை பரப்பி சிலர் 'கம்மட்டி பாடம்' படத்தின் வசூலை குறைப்பதற்குத்தான் இப்படி பண்ணுகிறார்கள் என படக்குழுவினர் குறம் சாட்டியுள்ளனர்.