மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கன்னடத்தில் பொதுமக்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து 'லூசியா' என்ற படத்தை எடுத்து அனைவரும் வியக்கும்படியான வெற்றியைப் பெற்றவர் பவன் குமார். அந்தப் படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து பவன் குமார் இயக்கி வெளிவந்த படம் 'யு டர்ன்'. வித்தியாசமான த்ரில்லர் படமான இந்தப் படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்ட நடிகை சமந்தா சில வாரங்களுக்கு முன்பே படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தார். அதன்பின் அவரே இந்தப் படத்தை சொந்மாகத் தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், சமந்தா அதை மறுத்தார், இருந்தாலும் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
தற்போது படத்தின் ரீமேக் தொடர்பான பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தாவே நடிக்கப் போகிறார். அவர் தயாரிக்கப் போவதில்லை என்று சொன்னாலும் படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளருக்கு சமந்தா தான் மறைமுகமாக நிதியுதவி செய்யப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். விரைவில் படம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகலாம்.