'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அனிருத்துக்கும் தனுஷூக்கும் இன்றைய இளம் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் முதல் முறை இணைந்த 'கொல வெறி' பாடல் யு டியூபில் 10 கோடி பார்வைகளைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. அதன் பின் இவர்கள் இணைந்த படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் இடம் பெற்றன. கடந்த வருடம் வெளிவந்த 'மாரி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'டானு டானு' பாடல் இந்தக் கூட்டணியின் மற்றுமொரு சாதனைப் பாடலாக அமைந்துள்ளது.
'டானு டானு' பாடலின் வீடியோ யு டியூபில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவேற்றப்பட்டது. இந்தப் பாடல் தற்போது 1 கோடியே 51 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தப் பாடலின் 'லிரிக் வீடியோ' என அழைக்கப்படும் பாடல் வரிகள் மட்டுமே இடம் பெற்ற வீடியோ ஒன்று அதற்கு முன்னதாக ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதுவும் 1 கோடியே 30 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டையும் சேர்த்தால் 2 கோடிய 81 லட்சம் பார்வைகளை இந்தப் பாடல் பிடித்து மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. இதுவரை வேறு எந்த திரைப்படப் பாடலும் இந்த அளவிற்கு யு டியுபில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டதில்லை.
'கொல வெறி' பாடல் கூட மேக்கிங் பாடலாகத்தான் யு டியூபில் அந்த அளவிற்கு சாதனையைப் புரிந்துள்ளது. ஆனால், ஒரு திரைப்படப் பாடல் 2 கோடி 81 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது இசை உலகில் பெரிய விஷயம்தான்.
அனிருத் இசையமைத்த 'வேதாளம்' திரைப்படப் பாடலான 'ஆலுமா டோலுமா' லிரிக் வீடியோவும் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யு டியூபைப் பொறுத்தவரையில் தமிழ் இசையமைப்பாளர்களில் அனிருத் தான் முதலிடத்தில் இருக்கிறார்.