வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் 'நிமிர்ந்து நில்', 'அறியான்' படங்களில் நடித்தவர், கன்னடத்தின் முன்னணி நடிகை ராகிணி திவிவேதி. நம்ம ஊர் நமீதா மாதிரி அங்கு கவர்ச்சிக்கு அடையாளமாக இருக்கிறவர். ஆனால் அவர் தற்போது மேக்அப் போடாமல் உடல் எடையை கணிசமாக குறைத்து 'கிச்சு' என்ற படத்தில் நடிக்கிறார்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. அந்த வாழ்க்கையின் ஊடாக அண்ணன், தங்கை பாசத்தை சொல்லும் படம். அண்ணனாக சாய்குமாரும், தங்கையாக ராகிணியும் நடிக்கிறார்கள். பிரதீப் ராஜ் என்பவர் இயக்குகிறார். “தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதற்கு தினமும் வெயிலில் நின்று நிறத்தை குறைத்துள்ளார். நிஜமான தொழிலாளிகளோடு நாள் முழுக்க வேலை செய்தார். தேசிய விருதை குறிவைத்து இந்தப் படத்தில் ராகிணி நடித்து வருகிறார் என்கிறார்கள்.