அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
த்ரிஷா இரண்டு வேடங்களில் நடித்து வரும் பேய் படமான 'நாயகி' தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. இதனை கோவி இயக்குகிறார். த்ரிஷாவின் மேலாளர் கிரிதர் தனது நண்பர் பத்மராஜாவுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் த்ரிஷா 80களில் வாழ்ந்த ஒரு பிரபல நடிகையாகவும், இன்றைய சராசரி பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருடன் சுஷ்மாராஜ், கணேஷ் வெங்கட்ராம், சத்யம் ராஜேஷ், ஜெயபிரகாஷ், கோவை சரளா, பரமானந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரகு குன்ஞ்சே இசை அமைக்கிறார். ஜெகதீஷ் சக்கட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிறகான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29ந் தேதியே வெளிவர வேண்டிய படம் பணிகள் முடிவடையாததால் சற்று தாமமாக வருகிற ஜூன் 10ந் தேதி வெளிவருகிறது. தமிழ்நாட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. முழுக்க முழுக்க த்ரிஷாவை நம்பி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. நயன்தாரா நடித்த 'மாயா' வெற்றி பெற்றதை போல 'நாயகி' வெற்றி பெறும் என்று த்ரிஷா நம்புகிறார். படத்துக்காக அதிக நாள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார். ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.