மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் ரூபா மஞ்சரி நாயகியாக நடித்தார். அதன்பிறகு சலீமில் அக்சா பிரதஷ்னி, இந்தியா பாகிஸ்தானில் சுஷ்மாராஜ், பிச்சைக்காரனில் சாத்னா டைட்டஸ் ஆகியோர் அவருக்கு ஜோடிகளாக நடித் தனர். இந்நிலையில், தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடித்துள்ளார். இவரும் பிச் சைக்காரன் சாத்னா டைட்டஸைப் போன்று கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டவர்தான்.
மேலும், இந்த படத்தில் ஹோம்லியான வேடத்தில் அருந்ததி நாயர் நடித்திருக்க, ஒரு அதிரடியான கிளாமர் கலந்த ரோலில் கார்-பைக் ரேசர் அலிஷா அப்துல்லா நடித்துள்ளார். அதர்வா நடித்த இரும்புக்குதிரை படத்தில் அறிமுகமான இவர் அதற்கடுத்து சைத்தான் படத்தில்தான் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது வேடமும் பேசுப்படும்படியாக உள்ளதாம். அதனால் இதன்பிறகு அவர் பிசியான நடிகையாகி விடுவார் என்கிறார்கள். அதோடு, என்னைப் போலவே பைக் ரேசரான அஜீத்துடன் ஒரு படத்திலேனும் நடிப்பது விட வேண்டும் என்பதுதான் எனது சினிமா லட்சியம் என்று இரும்புக்குதிரையில் நடித்தபோதே அலிஷா அப்துல்லா கூறியது குறிப்பிடத்தக்கது.